தமிழ்நாடு

எம்பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க சிறப்பு அமர்வு அமைக்க உள்ளதாக தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக சிறப்பு அமர்வு அமைக்க இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு அமர்வு அமைப்பது தொடர்பாக பதிவுத்துறைக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தெரிவித்துள்ளார்.

எம்பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள்  விரைந்து முடிக்க சிறப்பு அமர்வு அமைக்க உள்ளதாக தகவல்

00 Comments

Leave a comment