news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடும் நஷ்டத்தை சந்திப்பதாக வாழை விவசாயிகள் வேதனை
tv

Also Watch

tv

Read this

கடும் நஷ்டத்தை சந்திப்பதாக வாழை விவசாயிகள் வேதனை

மேலச்செவல், நெல்லை

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Banan leaf price

வாழை விவசாயிகள் வேதனை  :

நெல்லை சேரன்மகாதேவி மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டு வருகின்றனர் குறிப்பாக இந்த பகுதி வாழை விவசாயத்துக்கு புகழ் பெற்ற பகுதியாக உள்ளது இங்கு இருந்து வாழைத்தார்கள் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனர் வாழைத்தார் கிலோ 60 வரை விற்பனையாக நிலையில் தற்போது வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இந்த பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர் இதுபோன்ற சூழ்நிலையில் விலையும் வீழ்ச்சி அடைந்து இருப்பதால் அவர்கள் மேலும் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி விஜயன் கூறுகையில், விலை இல்லாததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஒரு தாருக்கு 150 ரூபாய் வரை செலவாகிறது ஆனால் தற்போது 90 முதல் 100 ரூபாய் வரை தான் விற்பனை ஆகிறது 60 ரூபாய் வரை கிலோவுக்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் வாங்குகிறார்கள்.

நான் 2000 வாழை மரம் நட்டுள்ளேன் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகி உள்ளது ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைப்பதில்லை எனவே எங்களுக்கு அரசு கிலோவுக்கு 25 ரூபாய் என
நிரந்தரமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும் தேனி மாவட்டத்தில் இருப்பதை போல் எங்களுக்கும் வாழைத்தார்கள் சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு அமைத்த தர வேண்டும் என வேதனையோடு தெரிவித்தார்.

Related Link
இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து ரூ.1,05,000 திருட்டு

இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து ரூ.1,05,000 திருட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 15 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved