news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து ரூ.1,05,000 திருட்டு
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து ரூ.1,05,000 திருட்டு

குடியாத்தம், வேலூர்

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Theft

சீட்டை உடைத்து ரூ.1,05,000 திருட்டு :

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மதினாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவர் நேற்று வீட்டில் வைத்திருந்த 25 பணத்தையும் மேலும் பேர்ணாம்பட்டில் உள்ள இந்தியன் வங்கியில் இவரது கணக்கில் இருந்த 80 ஆயிரம் பணத்தை சேர்த்து மொத்தம்1,05,000 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு கூட்டுறவு வங்கியில் அடமானம்
வைத்திருந்த தங்க நகையை மீட்க சென்ற பொழுது.

அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடையில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் சீட் கவரை உடைத்து அதில் வைத்திருந்த ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரொக்கம் பணம் திருடு போனதைக் கொண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சம்பவம் குறித்து ரவிச்சந்திரன் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு போலீசார் மளிகை கடையில் பொருத்தி வைத்திருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்திருந்த தங்கநகை மீட்க இருசக்கர வாகனத்தில் பணம் எடுத்துச் சென்ற நபரின் பணம் திருடுபோன சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
பொன்னமராவதியில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

பொன்னமராவதியில் 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 14052026

0
0 min agoshare
இன்றைய ராசி பலன்கள் 14052026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved