news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சமயபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
tv

Also Watch

tv

Read this

சமயபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

நரசிங்கமங்கலம், திருச்சி

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trichy

ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை :

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நரசிங்கமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுமாரியின் மகள் ரித்திகாஸ்ரீ.என்ற சிறுமிக்கு விஷ பூச்சி கடித்ததில் சிறுமியின் உடல் முழுவதும் தடிப்பு மற்றும் அரிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாயார் ராஜகுமாரி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரவு பணியில் இருந்த செவிலியர் ஜாஸ்மின் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கேட்டை பூட்டிவிட்டு உள்ளே இருந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரி மகளுடன் மருத்துவமனையில் நின்று நீண்ட நேர கூப்பிட்ட பின்னர் செவிலியர் ஜாஸ்மின் வந்துள்ளார்.

அப்போது ராஜகுமாரி தனது மகளுக்கு விஷ பூச்சி தீண்டியது என செவிலியர் ஜாஸ்மின் இடம் கூறியுள்ளார். அதற்கு செவிலியர் ஜாஸ்மின் மருத்துவமனை கேட்டை திறக்காமலே நோயாளியே வெளியே நிறுத்தி நீங்கள் வேறு மருத்துவமனைக்கு செல்லுங்கள் உங்கள் மகளுக்கு ஸ்டேஜ் தாண்டிவிட்டது.

ஸ்ரீரங்கம் மண்ணச்சநல்லூர் அல்லது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என செவிலியர் ஜாஸ்மின் சிறுமியின் தாயார் ராஜகுமாரியிடம் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சிறுமியின் தாய் ராஜகுமாரி செவிலியரை பார்த்து கேள்வி கேட்டுள்ளார் மருத்துவமனை கேட்டை திறக்காமலே நோயாளியை வெளியே நிறுத்தி இங்கு பார்க்க முடியாது வேற
மருத்துவமனைக்கு செல்லுங்கள் என எப்படி நீங்க சொல்லலாம் அரசு மருத்துவமனை பொதுமக்களுக்கு அல்லது உங்களது வீடா என செவிலியரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பிறகு செவிலியர் ஜாஸ்மின் ராஜகுமாரிடம் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது என கூறிய பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.இதனை அறிந்து வந்த சமயபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உதவி ஆய்வாளரிடம் செவிலியர் ஜாஸ்மின் மீது குற்றச்சாட்டை சுமத்தினர் அப்போது போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது செவிலியர் ஜாஸ்மின் தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்த காவல் உதவி ஆய்வாளர்.

மக்கள் சேவைக்கு வந்த நீங்கள் நோயாளியை கவனிக்காமல் படம் பிடிப்பது தவறு என சுட்டிக்காட்டி செவிலியருக்கு அறிவுரை கூறிய சிறுமிக்கு முதல் உதவி செய்யுங்கள் போலீசார் கூறினார்.

அப்போது முன்னதாக செவிலியர் ஜாஸ்மின் உதவி ஆய்வாளரிடம் நான் செய்ததை சொன்னதற்குப் பிறகு நீங்கள் என்னிடம் சாரி கேட்பீர்கள் என செவிலியர் கூறினார். பிரச்சனை தீர்க்க வந்த போலீசார் செவிலியரிடம் சாரி கேட்பதாக சொன்ன வார்த்தை அங்கு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுவது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் ஜாஸ்மின் பணியில் இருக்கும் போது தொடர்ச்சியாக நோயாளிகளை ஒருமையில் பேசுவதாகவும் இரவு நேரங்களில் கேட்டை பூட்டி கொண்டு கூப்பிட்டாலும் வருவதில்லை என கூறப்படுகிறது.

இது போன்ற சம்பவம் சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்கதையாகி வரும் நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் இந்த செவிலியர் மீது சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு தகவல் தெரியாது போல பேசியும் ,தனக்கு சம்பந்தமில்லாத துறையில் நடப்பது போல் கண்டுகொள்ளாமல் பதில் கூறினார்.

Related Link
RTO என்ற பெயரில் அடாவடி வசூல் நடைபெறுவதாக புகார்

RTO என்ற பெயரில் அடாவடி வசூல் நடைபெறுவதாக புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 33 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved