Also Watch
Read this
By: Manigandan Raja

51 சவரன் நகைத் திருட்டு :
கிளாம்பாக்கம் அடுத்த கொளப்பாக்கம், டி.வி.எஸ்., கிரீன் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன், 61. இவரது மனைவி உஷாராணி, 57. ராஜேந்திரன் மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்
தம்பதியர் நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த வாரம் பணியமர்த்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவுதம்பதியர் வெளியே சென்று, வீடு திரும்பி உள்ளனர். பின் இரவு உணவு உண்டு உறங்க செல்லும்போது வழக்கம்போல வேலைக்கார பெண் கொடுத்த பாலை அருந்தி உள்ளனர்
காலை எழுந்து பார்த்தபோது உஷாராணி அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. தவிர, வேலைக்கார பெண் இல்லாததும், வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, தம்பதியர் அளித்த புகாரின்படி, கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடம் வந்து, வீட்டின் பூட்டை உடைத்து, தம்பதியரிடம் விசாரித்தனர்.
அப்போது, வேலைக்கார பெண், பாலில் ஏதோ மருந்து கலந்து கொடுத்துள்ளதும், தம்பதியர் மயக்கமடைந்தபின், உஷாராணி அணிந்திருந்த 51 சவரன் நகையை திருடி, வீட்டை பூட்டி சென்றுள்ளதும் தெரிய வந்தது.
சம்பவம் குறித்து, கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேபாள பெண்ணை தேடி வருகின்றனர்.