சென்னை

சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ பணிகள் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம்,ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்:


சேத்துப்பட்டிலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும். இந்த பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டும்.

இதேபோல், ஜெமினி மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை (ஆற்காடு சாலை வழியாக) வள்ளுவர் கோட்டத்தை அடையலாம். மாற்றுப் பாதை ஒரு வழிப்பாதையாகச் செயல்படும்.

அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் இடதுபுறம் திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்கு வழக்கம் போல் செல்லலாம்.

வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காத்தி சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை சாலை, ஜி.என். செட்டி சாலை வழியாக அண்ணா மேம்பாலம் சென்றடையலாம்.

நேற்று சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல வாகனங்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஓரிரு நாட்களில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக வழிகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த வழியாக சென்றால் மாற்றுப்பாதையை சென்றடையலாம் என்பது குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

00 Comments

Leave a comment