news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் நிச்சயம் வரும்
tv

Also Watch

tv

Read this

வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் நிச்சயம் வரும்

திருவாரூர்

165

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அமல் 3

திருவாரூர் மாவட்ட நீதிமன்றதத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத் தலைவர் அமல்ராஜ், இளம் மற்றும் மூத்த வழக்குறிஞர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு என்னென்ன வர வேண்டும் என்றும் குறிப்பாக அனைத்து சிறப்பு நீதிமன்றம் இங்கே கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுகொண்டார். மேலும் இங்கு இருக்கும் நம்முடைய வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள், சென்னையில் உள்ள மாண்புமிகு கோர்ட்ஃபோலியோ நீதிபதியை சந்தித்து, இங்கே வருவதற்கான அத்தனை வேலைகளும் செய்யப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே பார் கவுன்சில் சார்பாக வழக்கறிஞருக்கான வெல்ஃபேர் இங்கே கொண்டு வந்திருக்கிறோம் என கூறிய அவர் ஸ்டைபன், வெல்ஃபேர், இன்சூரன்ஸ் என நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம்
அதை இன்னும் அதிகமாக ஆக்குவது பற்றியும், அதை எப்படி உயர்த்துவது பற்றியும், நம்முடைய மூத்த வழக்குறிஞர்களிடம் சந்தித்து உரையாடி இருக்கிறோம் என தெரிவித்த அமல்ராஜ் நிச்சயமாக, வழக்கறிஞர்களுடைய பாதுகாப்புச் சட்டம், எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு சட்டம் என்றும் அந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நமக்கு சட்டமாக தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்
இப்பொழுது அது ஒரு ஸ்டாண்டிங் கமிட்டி முன்னால் ஒரு டிராஃப்டாக இருக்கிறது, அது மிக விரைவில் வந்து ஒரு சட்டமாக கொண்டு வந்து, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் ஒரு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அதையும் மிக விரைவில் பிரதமரும், மத்திய சட்டத்துறை அமைச்சரும் நமக்கு சட்டமாக செய்வார்கள் என உறுதி அளித்திருக்கிறார்கள், அந்த சட்டத்தையும் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமென கூறினார்.

வழக்கறிஞர்கள் நல நிதியை உயர்த்த கோரிக்கை
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத் தலைவர் அமல்ராஜ், வழக்கறிஞருக்கான சேமிப்புத் தொகை, அதுக்கு உயர்த்துவதற்கான கோரிக்கை வைத்திருக்கோம். இந்த முறை வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று அரசு அமைக்கும் முதல்வரிடம் சந்தித்து, நலநிதியை 10 லட்சத்திலிருந்து உயர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என உறுதியளித்தார்.

நீதிபதிகள் பற்றாக்குறை விரைவில் சரியாகும்
நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகள் காலதாமதம் ஆகும் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலலித்த அவர், ஏற்கனவே இதுகுறித்து தலைமை நீதிபதிடம் முறையிட்டு இருக்கிறோம். மேலும் சிவில் நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கான ரெக்யூர்ட்மென்ட் இன்னும் தேவைப்படுகிறது. சிவில் நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதி வழங்க போகிறார்கள் என மிக விரைவில் நோட்டிபிகேஷன் கிடைக்கும், அப்படி வழங்கும் போது கிட்டத்தட்ட ஒரு 90 நாட்களில் நீதிபதியினுடைய பற்றாக்குறை சரி செய்து விடுவோம் என கூறினார். தற்போது அதிகமாக இல்லாத இடத்தில் சமன் பண்ணி கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மிக விரைவில் வந்து அதற்கான அந்த சிவில் ஜட்ஜஸ்க்கான தேர்வை நடத்தி மிக விரைவில் குறிப்பாக 90 நாட்களில் நிரப்புவதற்கான சாத்தியம் நிறைய இருக்கிறது என தெரிவித்தார்.


Related Link
கனிமவள கொள்ளையர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக

கனிமவள கொள்ளையர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved