news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனிமவள கொள்ளையர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக
tv

Also Watch

tv

Read this

கனிமவள கொள்ளையர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக

நீலகிரி

23

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nil pro main

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வட்டாட்சியர் அலுவலக முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


1. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க வழி வகை செய்ய வேண்டும்.

2. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் "சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை" உடன் இயற்ற வேண்டும்.

3. கனிமவள கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

4. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின், பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

5. கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.


6. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை இரத்து செய்திட வேண்டும்.

7. 2003ஆம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பை வட்டியுடன் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று மீள வழங்கிட வேண்டும்.

8. அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும்

9. பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும், தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும்

10. வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதிதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும்.

11. கிராம நிருவாக அலுவலர்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியம் வகையில் தமிழ்நாடு விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்


உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர், ஆய்வாளர் அலுவலக உதவியாளர் உட்பட அனைத்து அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் பல மணி நேரமாக காத்து நிற்கின்றனர் பலர் வெகு நேரமாக காத்திருந்து வீடு திரும்பி செல்கின்றனர்.

Related Link
உலா வந்த ஒற்றை பெரிய கரடி

உலா வந்த ஒற்றை பெரிய கரடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 26 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved