சினிமா

விக்கி பிறந்தநாளை குஷியாக கொண்டாடிய நயன்தாரா இருவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ வைரல் | Nayanthara

காதல் மனைவி நயன்தாராவுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது. பிறந்தநாளன்று எடுக்கப்பட்டதாக வெளியான வீடியோவில், இயக்குநர்கள் சங்கர், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் ஜவான் படத்தின் 'ஹைய்யோடா' பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்க விக்னேஷ் சிவன் கையை பிடித்தபடி நயன்தாராவும் சேர்ந்து கேக் வெட்டிபடி கொண்டாடும் காட்சி இடம்பெற்றிருந்தது. மின்னலே படத்தில் இடம்பெற்ற “வெண்மதி வெண்மதியே” பாடலை இசைத்தபடி விக்னேஷ்சிவன்-நயன்தாரா தம்பதி கொண்டாடியிருப்பது போன்று வெளியான மற்றொரு வீடியோவும் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.

00 Comments

Leave a comment