news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம்
tv

Also Watch

tv

Read this

பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம்

இளைஞர் போலீஸ் ஸ்டேஷன் விசிட்

72

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து சிறுமி மற்றும் மூதாட்டியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம் காதலித்த சிறுமியை மணமுடித்து தராத ஆத்திரத்தில் இளைஞர் வெறிச் செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நிலையில், அவரும் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதோடு, காவல்நிலையத்தில் சரணாகதி அடைந்தார்.

* கப்பளாங்கரையை சேர்ந்த அபிஷேக்கும், சிறுமியும் 2 ஆண்டாக பழக்கம்
* பல நாட்கள் பள்ளியை கட் அடித்து இளைஞருடன் சுற்றித் திரிந்த சிறுமி
* சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்த தந்தை


17 வயது காதலியை தமக்கு மணமுடித்து தராத ஆத்திரத்தில், பட்டப்பகலில் வீடு புகுந்து காதலியின் குடும்பத்தில் இருவரை, இளைஞர் குத்தி கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
பொள்ளாச்சி அருகே கொண்டேகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. அவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர், இருவரை குத்தி விட்டு தப்பியதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 17 வயது சிறுமியும் அவரது பாட்டியும் சரிந்து கிடந்தனர். உடனே இருவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வீடு புகுந்து கொலை செய்த இளைஞர் யார்? என்பது குறித்து விசாரிக்க தொடங்கினர்.

* 10 நாட்களுக்கு மேலாக காதலியுடன் பேச முடியாமல் மன உளைச்சல்
* கடந்த திங்கட்கிழமை சிறுமியின் வீட்டிற்கே சென்ற அபிஷேக்
* காதலியை தமக்கு மணமுடித்து தரும்படி வாக்குவாதம் செய்த இளைஞர்

முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கொடூரமாக குத்தி கொலை செய்தது அவரின் காதலன் தான் என்ற பகீர் உண்மை தெரிய வந்தது. கப்பளாங்கரையை சேர்ந்த 24 வயதான அபிஷேக்கும், உயிரிழந்த 17 வயது சிறுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பல நாட்கள் பள்ளியை கட் அடித்து விட்டு இருவரும் வெளியில் சுற்றித் திரிந்ததாக கூறப்படும் நிலையில், காதல் விவகாரம் ஒரு நாள் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது.

உடனே மகளை அழைத்து கண்டித்த பூபதி, சிறுமியை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார். இதனால் 10 நாட்களுக்கு மேலாக காதலியுடன் பேச முடியாமல் போகவே கடும் மன உளைச்சலுக்கு ஆளான அபிஷேக், கடந்த திங்கட்கிழமை சிறுமியின் வீட்டிற்கே சென்றுள்ளான். அந்நேரம் சிறுமியும், அவரின் பாட்டியும் மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படும் நிலையில், காதலியை தமக்கு மணமுடித்து தரும்படி வாக்குவாதம் செய்திருக்கிறார் அபிஷேக்.

* அபிஷேக்கை வெளியே போக சொல்லி சிறுமி சத்தம் போட்டதாக தகவல்
* வீடு தேடி வந்த தன்னை வெளியே போக கூறிய ஆத்திரம்
* நெகமம் காவல்நிலையத்தில் சரண் அடைந்த இளைஞர் அபிஷேக்

ஆனால், வயது மற்றும் படிப்பை காரணம் காட்டி மூதாட்டி மறுப்பு தெரிவிக்க, மறுபுறம் வெளியே சென்ற தந்தை வீட்டுக்கு வந்து விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்ற பயத்தில் அபிஷேக்கை வெளியே போக சொல்லி சிறுமியும் சத்தம் போட்டதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த அபிஷேக், வீடு தேடி வந்த தன்னை காதலி வெளியே போக சொன்ன ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளான். இதில் சிறுமி சரிந்து விழுந்த நிலையில், அருகில் இருந்த மூதாட்டியையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். இதனையடுத்து எப்படியும் போலீசார் தன்னை பிடித்துவிடுவார்கள் என எண்ணிய அபிஷேக் தான் இரட்டை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு நெகமம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது, தான் அரளி விதையை அரைத்து குடித்ததாக கூறியதால், இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Related Link
இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து

5
7 mins agoshare
மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau