news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புலி தாக்கி ஆண் உயிரிழப்பு?
tv

Also Watch

tv

Read this

புலி தாக்கி ஆண் உயிரிழப்பு?

நீலகிரி

22

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nil photo

புலி தாக்கி உதகை அருகே தோடர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழந்ததையடுத்து கடந்த ஓராண்டில் இரண்டு பேரை புலி தாக்கிய நிலையில் உறவினர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

புலி தாக்கி ஆண் உயிரிழப்பு?
உதகை அருகே உள்ள சின்ன காடிமந்து பகுதியில், தோடர் இனத்தைச் சேர்ந்த சுமார் 57 வயது ஆண் ஒருவர் புஷ் தாள் குட்டன் புலி தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள், உடலின் பல பகுதிகளை வனவிலங்குகள் உண்ட நிலையில் அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.


புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகம்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு மேலான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அந்த நபர் காட்டுப் பகுதிக்குள் சென்ற போது புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் மரணம் குறித்த துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உறுதி செய்யப்படும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர் சாலை மறியல்
இந்த நிலையில் தொடர்ந்து புலி தாக்குதலில் மனித உயிர்கள் மட்டுமல்லாமல் தங்களுடைய கால்நடைகளும் பலியாகி வருவதால் தாங்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கூறி பழங்குடியின மக்கள் உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரும், வனத்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தியும் நிலையில் பேச்சு வார்த்தை தோல்வியுற்றதையடுத்து பொதுமக்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவசர வேலைக்கு செல்பவர்களும், சுற்றுலா பயணிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

Related Link
தண்ணி விடச்சொன்னா ஏட்டிக்கு போட்டியா பேசுறாங்க...

தண்ணி விடச்சொன்னா ஏட்டிக்கு போட்டியா பேசுறாங்க...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்கு

7
41 mins agoshare
அதிமுகவை விழுங்கிய பாஜக - ராகுல்காந்தி கடும் தாக்குbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved