news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தீபிகா படுகோன் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தீபிகா படுகோன் அறிவிப்பு

ரசிகர்கள் விரும்பும் ஜோடி

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2வது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தீபிகா படுகோன் அறிவிப்பு

பாலிவுட் ரசிகர்களுக்கு தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்த தீபிகா
நடிகை தீபிகா படுகோன் இன்று ஏப்ரல்-19ஆம் தேதி காலை தமது சமூக வலை தள பக்கத்தில், மகள் 'Dua' கர்ப்ப பரிசோதனை கிட் ஒன்றை கையில் பிடித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்து உள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "Dua பெரிய அக்கா ஆகப் போகிறாள், அருமையான செய்தி" என்பது போன்ற பதிவுகளை, சமூக வலைதளங்களில் தீபிகாவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

காதல் திருமணம், நட்சத்திர ஜோடி
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவரும் 'Goliyon Ki Raasleela Ram-Leela' படத்தில் சேர்ந்து நடித்த போது, காதலிக்க தொடங்கினார்கள். அந்த படத்திற்கு பின் இவர்கள் இருவரும் சேர்ந்து பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், 83 ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தனர்.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் 2018ஆம் ஆண்டு இத்தாலியின் லேக் கோமோவில் உள்ள Villa del Balbianelloவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கொங்கணி மற்றும் சிந்தி மரபுகளை பின்பற்றி நடந்தது.

ஆறு ஆண்டுகள் கழித்து...
திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீபிகாவிற்கு மகள் பிறந்தார். குழந்தைக்கு 'Dua' பெயர் வைத்துள்ளார். தற்போது தீபிகா படுகோன், தனது இரண்டாவது குழந்தையை வரவேற்கத் தயாராகி உள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் விரும்பும் ஜோடி
தீபிகா 'Kalki 2898 AD மற்றும் Singham Again போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'King' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் துரந்தர், துரந்தர் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'Pralaya' என்ற புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Related Link
விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி

விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோ

3
10 mins agoshare
மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved