ஆன்மீகம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சலங்கை பூஜை மாஸ்டர் அகாடமி மாணவர்களின் நாட்டியாஞ்சலி

விநாயகர் சதுர்த்தியையொட்டி ... கடலூர் மாவட்டம்,விருத்தாசலத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாஸ்டர் அகாடமி சார்பில் .... திருக்கோயில் உட்பிரகாரத்தில் உள்ள அனைத்து பிள்ளையார் சன்னதியில் சலங்கை பூஜை நடைபெற்று, நாட்டியாஞ்சலி விழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில்,இவ்வருடவிநாயகர் சதுர்த்தி யொட்டி ...சலங்கை பூஜை நாட்டு ஏஞ்சலி விழா நடைபெற்றது.
முன்னதாக, கோயில் உட் பிரகாரத்தில் உள்ள... அருள்மிகு ஆழத்து பிள்ளையார் கோவிலில்...மாஸ்டர் அகாடமி மாணவர்களின் சலங்கை பூஜை நடைபெற்று.அதனைத் தொடர்ந்து திருக்கோயில் கலையரங்கத்தில் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பரதநாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், பரதநாட்டிய பாடல்களுக்கு தாள, அபிநய பாவனைகளுடனும்,....
விநாயகர், சிவன்,அம்மன், முருகர் உள்ளிட்ட பக்தி பாடல்களுக்கு பக்தி பரவசத்துடன் நாட்டியப்பள்ளி மாணவர்கள் நடனமாடி காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.

இந்த நாட்டியாஞ்சலி விழாவின் போது....திடீரென மழை வந்ததால்,இரண்டு முறை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது, பார்வையாளர்கள் கோயில் வளாகத்தில் விரைந்தோடி நின்றனர்.ஒரு சிலர் . நின்றபடி பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.பிறகு மழை நின்று நாட்டியாஞ்சலி ஆரம்பித்த பிறகு...பொதுமக்கள் மீண்டும் அமர்ந்து,மழை தூரலிலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை அமர்ந்து உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

இந்த நாட்டியாஞ்சலி விழாவில் மாஸ்டர் அகாடமியில்... பயின்று வரும் சிலம்பாட்டம் மாணவர்களான சிறுவர் , சிறுமியர்....சிலம்பாட்டம் ஆடி காண்போரை வியக்க வைத்தனர்.
இறுதியாக, நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.

00 Comments

Leave a comment