Also Watch
Read this
திமுக மாணவரணி செயலாளராக, முதல் முறையாக ஜெ.வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

திமுக மாணவர் அணி
நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. 2021ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 2025ஆம் ஆண்டு திமுகவின் மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு;
திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ.வீரமணி, மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இதன் மூலம் திமுக மாணவர் அணியின் வரலாற்றிலேயே செயலாளர் பொறுப்புக்கு நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையை வீரமணி பெற்றுள்ளார்.

திமுக மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அறிவிப்பு வெளியானது.

முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி
இதுகுறித்து ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவு;
தமிழ், தமிழர், திராவிடம், மதச்சார்பின்மை, சமூகநீதி என்னும் கொள்கை வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் அரசியல் அரணாக நிற்கும் திமுகவில், கொள்கை பரப்பு என்னும் மாபெரும் அணியின்


இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கிய தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். திசை எங்கும் பரப்புவோம் திராவிட அரசியல்.
இவ்வாறு ராஜீவ்காந்தி பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved