Also Watch
Read this
By: Manigandan Raja

17 சவரன் திருட்டு :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் பரபரப்பான கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வளையாம்பட்டு கிராமம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் ராஜா வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மனைவி அஞ்சலை மற்றும் மகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோடைக்கால சுற்றுலாவிற்கு சென்றிருந்தனர். இன்று அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு
உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த சுமார் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சங்கராபுரம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved