ஆன்மீகம்

அயோத்தி ராமர் கோவிலுக்கு கோவையில் இருந்து சிறப்பு ரயில்

அயோத்தி ராமர் கோவிலுக்கு கோவையில் இருந்து சிறப்பு ரயில்

அயோத்தி ராமரை தரிசனம் செய்ய கோவையிலிருந்து சென்ற சிறப்பு ரயிலை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயிலில் சுமார் 700 பேர் தரிசனத்திற்காக சென்றுள்ளனர்.

பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பியும், மலர்கள் தூவியும் வழி அனுப்பி வைத்தனர்.

ரயில் கிளம்பும் முன் முழுமையாக மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த ரயில் 11 ஆம் தேதி அயோத்தியை சென்றடையும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 13-ஆம் தேதி ஒரு சிறப்பு முறையில் கோவையிலிருந்து புறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
 

00 Comments

Leave a comment