தமிழ்நாடு

‘மோடி பற்றி பேசினால் தொகுதிக்குள் காலெடுத்து வைக்க முடியாது’ திமுக எம்எல்ஏவுக்கு அண்ணாமலை சவால் | Annamalai

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கொன்றது பாஜகதான் என பேசிய விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனுக்கு அண்ணாமலை பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபயணம் மேற்கொண்ட அவர், மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மறுபடியும் அந்த வார்த்தை சொல்லிப்பார்க்க முடியுமா? என்றும், இனி பேசினால் அவர் விளாத்திகுளத்தில் கால் எடுத்து வைக்க முடியாது என்றும் பகிரங்கமாக சவால் விடுத்து பேசினார். மேலும், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. ஒரு குட்டி செந்தில்பாலாஜி என்று அண்ணாமலை விமர்சித்தார்.

00 Comments

Leave a comment