Also Watch
Read this
By: Manigandan Raja

அணிவகுத்து நின்ற மஞ்சள் லோடு வாகனங்கள் :
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது சங்கத்தில் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் நாளை நடைபெறும் மஞ்சள் ஏலத்திற்காக ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமில்லாமல்.
கள்ளக்குறிச்சி,பெரம்பலூர்,கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மஞ்சள் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு போதில இடம் இல்லாததால் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மஞ்சள் மூட்டைகளோடு சாலை ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
நீண்ட நேரமாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved