Also Watch
Read this
By: Manigandan Raja

பேனர் வைத்த கிராம மக்கள் :
குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக பிலாங்காலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை பத்து வருடங்களுக்கு முன் பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர்.
இந்த நிலத்தை அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணம் கொடுத்து வாங்கி பேரூராட்சி அனுமதியுடன் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலத்தை விற்பனை செய்யும் போதே நில உரிமையாளர்கள் சாலைக்கென இடத்தை போட்டுவிட்டு அதனை அரசுக்கு எழுதி கொடுக்காமல் ஏமாற்றி இருந்து வந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் அவர்கள் வீடு கட்டி இருக்கும் பகுதிக்கு மின்சார கிடைக்க மின் கம்பங்கள் அமைத்து தர கேட்டபோது அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதனையடுத்து ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் செலுத்தி மின்கம்பங்கள் அமைத்து மின்சாரம் பெற்றுள்ளனர். தொடர்ந்து குடிநீர் இன்றி பரிதவித்து வந்துள்ளனர் இதனையடுத்து
பேரூராட்சி சார்பில் அம்ரூத் திட்டத்தின் மூலம் வீட்டு இணைப்பு கொடுத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளனர்.
இவை அனைத்தும் பெறப்பட்ட பின்னரும் முறையான சாலை வசதி இல்லாததால் மழை காலங்களில் சக்தி நிறைந்து நடந்து செல்ல முடியாமலும் வயதான முதியவர்கள் பலரும் கீழே விழுந்து எழும்பும் அவல நிலை உள்ளது அதே போல் குண்டும் குழியுமாக காணப்படும் இந்த வழியாக பள்ளி செல்லும் இங்குள்ள மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் அவசர காலங்களில் நோய்வாய்ப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வருவது இல்லை என்றும் ஆட்டோ போன்ற வாகனங்களும் உள்ளே வர அச்சப்பட்டு மேலேயே நின்று திரும்பி செல்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாமலும் பரிதவித்து வரும் இப்பகுதி மக்கள் தங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஊரின் வாயிலில் பேனர் வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர் இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved