news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பவானி அம்மன் ஆலயத்தின் 11-ம் ஆண்டு வருடாபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

பவானி அம்மன் ஆலயத்தின் 11-ம் ஆண்டு வருடாபிஷேகம்

தென்காசி, புளியங்குடி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தென்காசி 1008 பால்குடம்

11-ம் ஆண்டு வருடாபிஷேகம் :

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே ஸ்ரீ பவானி அம்மன் கோவில் ஒன்று உள்ளது.இந்த முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 11 ஆம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு பங்குனி உத்திர நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள பால விநாயகர் சன்னதியில் இருந்து குருநாதர் சக்தி யம்மா தலைமையில் விரதம் இருந்த பக்தர்கள் 1008, பால்குடம், மற்றும் 508 தீர்த்த குடம் எடுத்தனர்.

குருநாதர் சக்தியம்மா தலைமையில் ஊர்வலம் கோவில் முன்பு துவங்கி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை விநாயகர் கோவில் வழியாக சென்று புளியங்குடி நகர் பகுதியில் முக்கிய தெரு வழியாக கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீராலும், பக்தர்களால் கொண்டுவரப்பட்ட 1008 பால்குடம், மற்றும் தேன்,குங்குமம்,தயிர் சந்தனம் தேன் உள்பட 21 நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களான பால விநாயகர், கல்யாண சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை பதினெட்டாம்படி கருப்பசாமி பவானி பத்ரகாளியம்மன், செங்காளியம்மன் ஆகிங தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின் பெரிய தீபாரனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Link
போட்டி கடினமாக தான் இருக்கும் என சுந்தர்.சி பேட்டி

போட்டி கடினமாக தான் இருக்கும் என சுந்தர்.சி பேட்டி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராசிபுரம் தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு

0
27 mins agoshare
நாமக்கல் தேர்தல் பூத்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved