news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போட்டி கடினமாக தான் இருக்கும் என சுந்தர்.சி பேட்டி
tv

Also Watch

போட்டி கடினமாக தான் இருக்கும் என சுந்தர்.சி பேட்டி

மதுரையில் சுந்தர்.சி

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போட்டி கடினமாகத் தான் இருக்கும் என்றும், ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், சுந்தர்.சி தெரிவித்து உள்ளார்.

வெற்றிக்கனியை பரிசளிப்பார்கள்
மதுரை மத்திய சட்டப்பேரவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் இயக்குனருமான சுந்தர்.சி, மதுரை விமான நிலையத்தில் கூறியதாவது:
மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மதுரை மக்களின் அன்பாலும், மதுரை மண்ணின் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் கண்டிப்பாக, இங்கே நல்லபடியாக வெற்றிக்கனியை எனக்கு மதுரை மக்கள் பரிசளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னால், என்னுடைய முதல் பேட்டியை ஆரம்பிக்கிறேன். இதற்கு முன் சினிமாவிற்காக, சினிமா இயக்குநராக எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கேன். இந்தக் களம் எனக்கு ரொம்ப புதுசு.

எம்ஜிஆரின் கோட்டை
மதுரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கோட்டை, புரட்சித் தலைவி அம்மாவுடைய கோட்டை. மதுரை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. பல்வேறு சாலை வசதிகள், மேம்பாலங்கள் என மதுரை வளர்ச்சிக்காகப் புதிய நீதி கட்சி, இந்த தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று, ஏ.சி.சண்முகம் கூறினார்

தூங்கா நகரம் மதுரை
தொகுதியைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதை அலசி ஆராய்ந்து, ஏற்கனவே நிறைய தடவை மதுரைக்கு வந்திருக்கிறேன். இங்கே படப்பிடிப்புக்காக வந்திருக்கிறேன். தூங்கா நகரம் மதுரையைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதில் உள்ள பிரச்சனையெல்லாம் தெரிந்து, மக்களுக்காகட்டும் இந்த மண்ணுக்காகட்டும் நல்ல தீர்வைத் தர, என்னால் முடிந்த அளவுக்கு நல்ல தீர்வு கொடுக்க வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும் என்று நான் வந்திருக்கிறேன்.


வேட்பு மனு தாக்கல்
நான்காம் தேதி 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன். உடனே தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறேன். போட்டி, எல்லா இடத்திலும் கடினமாகத் தான் இருக்கும். போட்டி என்று பார்த்தால், ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்கு தான் போராடுகிறோம். கண்டிப்பாக ஜெயிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கண்டிப்பாக ஜெயிப்போம்.
இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.

Related Link
இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் தான் போட்டி

இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் தான் போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved