news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

சிவகாசியில் இபிஎஸ்

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

சிவகாசியில் இபிஎஸ்
சிவ​காசி பேருந்து நிலை​யம் அருகே விருதுநகர் மாவட்​டத்​தில் உள்ள 7 தொகு​தி​களில் போட்​டி​யிடும் அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை அறி​முகம் செய்து, பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனிசாமி பிரச்​சா​ம் செய்​தார்.
அப்​போது இபிஎஸ் பேசி​ய​தாவது:
காவிரி - குண்​டாறு திட்​டம் மூலம் மேட்​டூர் அணை​யின் உபரி நீரை கால்​வாய் வழியாக, சிவகங்கை, புதுக்​கோட்டை, விருதுநகர் மாவட்​டத்​தில் வேளாண்மை வளர்ச்​சிக்கு உதவும் வகையில், இந்த ​திட்​டத்​திற்கு அதி​முக ஆட்​சி​யில் ரூ.14,000 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டு, அடிக்​கல் நாட்டி வைத்​தேன். ஆனால், இந்த ​திட்​டத்தை திமுக திட்​ட​மிட்டு முடக்​கி ​வைத்​துள்​ளது. மீண்​டும் அதி​முக ஆட்​சி​யில் இந்த ​திட்​டம் நிறை​வேற்​றப்​படும். இதன்​மூலம் விருதுநகர் மாவட்​டம் பசுமை​யாக மாறும்.

சிறுமி முதல் மூதாட்டி வரை
இந்த ஆட்​சி​யில், சிறுமி முதல் மூதாட்டி வரை பாது​காப்​பு இல்​லை. இப்​படிப்​பட்ட ஆட்சி தொடர வேண்​டு​மா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடி​யாத பொம்மை முதல்​வர் தமி​ழ​கத்தை ஆள்​கி​றார். நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் டிஜிபி நியமிக்​க​வில்​லை. எங்கே பார்த்​தா​லும் கஞ்​சா, போதை மாத்​திரை, சாக்​லேட், திர​வம் என பல ரூபத்​தில் போதை பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

தமி​ழ​கத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும்
போதை ஆசாமிகளால் போலீசுக்கே பாது​காப்​பில்​லை. போதை ஆசாமிகளால் கொ*, கொள்​ளை, பாலியல் சீண்​டல் நடக்​காத நாளே இல்​லை. டிஜிபி ஒரு​வர் கஞ்​சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என்று, ஓ போட்​டுக்​கொண்டே ஓய்​வு​பெற்​று​ விட்​டார்.

ஏனெனில் கஞ்சா விற்​பதே ஆளுங்​கட்​சிக்கு துணை நிற்​பவர்​கள் தான். அதி​முக ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் தமி​ழ​கத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும். ​டா​லின் மாடல் அரசு பெயி​லியர் மாடல் அரசு, பை, பை, ஸ்டா​லின்.

ரூ.5 லட்​சம் கோடி கடன்
நகராட்சி நிர்​வாக துறை​யில் நடந்த ஊழல் குறித்து அதி​முக ஆட்சி அமைந்​ததும் உரிய அமைச்​சர் மற்​றும் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். திமுக ஆட்​சி​யில் நிதி​யமைச்​ச​ராக இருந்த பி.டி.ஆர்.தியாக​ராஜன் பேசி​ய​தாக வெளி​யான ஆடியோ​வில், இரு ஆண்​டு​களில் ரூ.30 ஆயிரம் கோடி சம்​பா​தித்து உள்​ள​தாக பேசி​யது குறித்து, முதல்​வர் இது​வரை பதில் தர​வில்​லை.
இந்​தி​யா​வில் நம்​பர் ஒன் மாநிலம் தமி​ழ​கம் என்​கி​றார். ஊழல் செய்​வ​தில் இந்​தி​யா​வில் நம்​பர்-1 ஆட்சி. ஊழலுக்கு கலைக்​கப்​பட்ட அரசு திமுக அரசு. திமுகவை​யும், ஊழலை​யும் பிரிக்க முடி​யாது. கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.5 லட்​சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்​டார்​.
இவ்​வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.

Related Link

"அடிமைக் கூட்டத்திற்கு எரிச்சல்"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
4 hrs 15 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved