Also Watch
Read this
மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்திருப்பது 100 சதவீத குதிரை பேரம் என, அதிமுக எம்பி இன்பதுரை கூறி உள்ளார்.
சபாநாயகர் அறிவிக்கும் முன்னரே...
இதுதொடர்பாக, அதிமுக எம்பி இன்பதுரை வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே, அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீத குதிரை பேரம்.
இவ்வாறு இன்பதுரை பதிவிட்டு உள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா
மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமையில், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ராஜினாமா செய்தனர்.
வேலுமணி முகாமில் இருந்த நிலையில், 3 அதிமுக எம்எல்ஏக்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம், இன்று நேரில் வழங்கினர்.

3 பேரின் ராஜினாமா ஏற்பு - சபாநாயகர் அறிவிப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். ராஜினாமா கடிதம் முறையாக இருந்ததால் விதிகளின்படி உடனடியாக ஏற்கப்பட்டதாகவும் சபாநாயகர் விளக்கம் அளித்து உள்ளார். எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியதில்லை எனக் கூறி உள்ள சபாநாயகர், ராஜினாமா நோக்கத்தை சந்தேகிப்பதோ, ஆலோசனை வழங்குவதோ தனது வேலையில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved