news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நான்கு தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டி - மதிமுக அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

நான்கு தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டி - மதிமுக அறிவிப்பு

சீர்காழியிலும் உதயசூரியன் சின்னம்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி என வைகோ அறிவித்துள்ளார். சீர்காழி தொகுதியில், தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். ஆனால், இப்போது ஒரு புதிய அறிவிப்பு வந்துள்ளது.

சீர்காழியிலும் உதயசூரியன்
இதன்படி சீர்காழி தொகுதியிலும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் என்பவர் உதயசூரியன் சின்னத்தில் தான் களம் காண்பார் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் மதிமுக போட்டியிடக்கூடிய 4 இடங்களிலுமே திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடப் போகிறார்கள். இதனால், உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

வைகோ அறிவிப்பு
தேர்தல் ஆணையத்திடம் தனி சின்னம் ஒதுக்கக் கேட்டிருந்தும், சின்னம் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால், இந்த புது முடிவு எடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.

Related Link
பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்த கிராம மக்கள்

0
7 mins agoshare
கன்னியாகுமாரி ரோடு பிரச்சனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved