news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி
tv

Also Watch

tv

Read this

பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி

பூரண மதுவிலக்கு, மகளிருக்கு ரூ.2,000

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்றத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை, கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டார். 5 லட்சம் பேருக்கு அரசு வேலை, பஞ்சாப் மாநிலத்தைப் போல் போதைப் பொருளுக்கு எதிரான போர் என்ற இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு கோடி வேலைவாய்ப்புகள்
பாமக தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பதாவது;
* தமிழ்நாட்டில் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்
* படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்
* அரசு, தனியார் நிறுவனங்களில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

பூரண மது விலக்கு

* போதை, புகைப் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கொண்டு வரப்படும்
* போதைப் பொருள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10,000 பரிசு
* பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
* ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்
* நெல் முதல் எள் வரை, பழங்கள், காய்கறிகள், அனைத்து வேளாண் பொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்

கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்
* பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்
* ரேஷன் கடைகளில் 2 கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்
* வேளாண் துறை மார்க்கெட்டிங் செய்ய புதிய அமைச்சர் பதவி உருவாக்கப்படும்
* தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு 1 வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
* தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும்

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.2,000
* தமிழ்நாட்டின் 2ஆவது தலைநகரமாக திருச்சியை மாற்றுவோம்
* குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்
* 100 நாள் திட்டத்தை 150 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
* அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்படும்
* ஞாயிற்றுக்கிழமையில் ரூ.25க்கு அசைவ சாப்பாடு வழங்கப்படும்



பத்து ரூபாய்க்கு மக்கள் சாப்பாடு
* ரூ.10க்கு மக்கள் சாப்பாட்டு திட்டம் தொடங்கப்படும்
* அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி நிறுவப்படும்
* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக படு தோல்வி
இதுதொடர்பாக, அன்புமணி கூறியதாவது;
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக படுதோல்வி அடைந்து விட்டது. வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றிவிட்டு மக்களுக்கு திமுக நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. எப்போதும் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் சிறப்பாக இருக்கும். தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கு நாங்கள் அளிக்கும் சத்தியம். தேர்தல் அறிக்கை கதாநாயகனோ அல்லது ஹீரோவோ கிடையாது.

மதுவை ஒழிப்போம்
இந்த முறையும் நாங்கள் மருத்துவம், கல்வி, வேளாண்மை, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து உள்ளோம். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மதுவை ஒழிக்க நாங்கள் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இம்முறை மதுவை ஒழிப்போம். பாமகவின் தேர்தல் அறிக்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது.
இவ்வாறு அன்புமணி கூறினார்.

பாமகவுக்கு 18 தொகுதிகள்
அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், 18 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கை, முன்னாள் எம்.பி.செந்தில் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Link
பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்

பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லை என இபிஎஸ் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
1 hr 8 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved