news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிரஷருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

கிரஷருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரிக்கை

அ.தோப்புப்பட்டி, திருச்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருச்சி தேர்தல் புறக்கணிப்பு

அனுமதியை ரத்து செய்யக் கோரிக்கை  :

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஏ.தோப்புப்பட்டி கிராமம் உள்ளது. 700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தோப்புப் பட்டியை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே எம்.சாண்ட் கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு அ.தோப்புப்பட்டி, ரெட்டமலைப்பட்டி, சரவணம்பட்டி, சின்னகுளத்துப்பபட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் காற்றில் பரவும் கல் தூசியினால் வேளாண் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

மேலும் கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தீவனங்கள் தூசியால் நச்சுத்தன்மையடையும். மேலும் சுவாசக்கோளாறு ஏற்படும் என்பதால் மக்கள் நலன் கருதி கிரஷர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது.

எனவே கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தி கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் தற்போது வரை நடவடிக்கை எடுக்காத நிலையில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து நேற்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் கிராமத்தினரை மிரட்டும் தொனியில் பேசியதாகவும் இதனால் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று பொதுமக்கள் அறிவித்தபடி கிராமத்தில் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியுள்ளதோடு ஊரில் தேர்தல் புறக்கணிப்பு பதாகையும் வைத்துள்ளனர்.

கிருஷருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவேண்டும் என கோரி பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியை ரத்து செய்தால் மட்டுமே தேர்தலில் ஓட்டுப்போடுவோம் என தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தங்கள் பகுதி மக்கள் அனைவரும் ரேசன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஓப்படைப்போம் எனவும் கூறுகின்றனர். கிரஷருக்கு எதிர்ப்பு
தெரிவித்து கிராமத்தினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
மின்கம்பத்தில் மின்கம்பி அகற்றும் போது விபத்து

மின்கம்பத்தில் மின்கம்பி அகற்றும் போது விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராசிபுரம் தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு

0
1 hr 2 mins agoshare
நாமக்கல் தேர்தல் பூத்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved