தமிழ்நாடு

100 பேரிடம் ரூ.1.31 கோடி மோசடி செய்த குடும்பம்.!

100 பேரிடம் ரூ.1.31 கோடி மோசடி செய்த குடும்பம்.!

புதுச்சேரியில் குடும்பமே சேர்ந்து 100 பேரிடம் 1 கோடியே 31 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சீவி நகரை சேர்ந்த கோபி, அவரது மனைவி முத்தாலம்மன் மற்றும் உறவினர்களான சுரேஷ், முரளி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். ஏலச்சீட்டின் மொத்த தொகை 2 லட்சம் எனவும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் எனவும் 100 பேரை சேர்த்ததாக கூறப்படுகிறது. மாதம் 4 முறை ஏலம் விடப்பட்டு ஏலதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் என கூறிய நிலையில் அடுத்தடுத்த மாதம் பணத்தை வழங்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 

00 Comments

Leave a comment