இந்தியா

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றதாக அறிவிப்பு

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றதாக அறிவிப்பு

 

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் எட்டுபேரின் வாக்குகளை கிறுக்கி அவற்றை செல்லாததாக அறிவித்த தேர்தல் அதிகாரிக்கு குட்டு வைத்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த எட்டு வாக்குகளையும் செல்லக்கூடிய வாக்குகளாக அறிவித்து, அதன் அடிப்படையில் ஆம் ஆத்மி வேட்பாளர் 20 வாக்குகளுடன் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அலுவலரை குற்றவாளி எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு தெரிவித்துள்ளது.

00 Comments

Leave a comment