இந்தியா

திரையரங்குகளுக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு அறிவுரை

திரையரங்குகளுக்குள் பட்டாசுகள் வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் சல்மான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் திரையரங்குகளில் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது என்றும், இதனால் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் எனவும் கூறியதோடு, தனது கவனத்தை ஈர்ப்பதாக நினைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் தனது கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என நினைத்தால், அந்த பாலை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

திரையரங்குகளுக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும்  பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு அறிவுரை

00 Comments

Leave a comment