news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா

தூத்துக்குடி

15

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut main(3)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா 7ம் நாளான இன்று சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்திக்கோளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கடந்த 21ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது .

சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்
ஏழாம் திருவிழாவான இன்று காலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்த சுவாமி சண்முகருக்கு பல வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சுவாமி சண்முகருக்கு அலங்காரமாகி, மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்ரத்தில்
எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

8 வீதிகளிலும் உலா வரும் சண்முகர்
எட்டாம் திருவிழாவான நாளை 28ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோயில் சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளும் சுவாமி
அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல கோயிலில் இருந்து சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோயில் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் நாள் திருவிழா தேரோட்டம் மார்ச் 2ம்தேதி திங்கள் கிழமை காலை 7 மணிக்கு மேல் நடக்கிறது.

அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளும் சுவாமி
11 ஆம் திருவிழாவான 3ம்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு மேல் சுவாமி அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி தெப்பக்குளம் மண்டகப்படி சேர்தல் அங்கு இரவு 10:30 மணிக்கு மேல் அபிஷேகம் அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள் முருகன் இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Link
உங்களுக்கு அந்த குள்ளநரி தெரியுதா?

உங்களுக்கு அந்த குள்ளநரி தெரியுதா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
1 hr 36 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved