இந்தியா

மேற்குலக ஊடகங்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

மேற்குலக ஊடகங்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

இந்தியாவின் ஜனநாயக தேர்தலில் மேற்குலக ஊடகங்கள் தலையிட்டு அரசியல் செய்வதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டினார். ஹைதராபாதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் நடக்கும் தேர்தல் குறித்து மேற்குலக ஊடகங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்துவதாகவும், அதை தெரிந்தே அவர்கள் செய்வதாகவும் விமர்சித்தார். இந்தியாவில் கடும் கோடைக்காலம் நிலவும் இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது ஏன் என வெளிநாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியை தாம் படித்ததாக தெரிவித்த ஜெய்சங்கர்,இந்த கோடைக் காலத்தில் குறைவான வாக்குகள் பதிவானாலும், அது வெளிநாடுகளில் பதிவாகும் வாக்குகளை விட அதிகம் என கூறினார். இந்த மேற்குலக ஊடகங்கள் இந்திய அரசியலை வைத்து விளையாட விரும்புவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment