news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மக்களை மடையர்கள் ஆக்கியது இவர்கள் தான்...
tv

Also Watch

மக்களை மடையர்கள் ஆக்கியது இவர்கள் தான்...

மதுரை

841

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ntk 3

விவசாயி வாழ்ந்தால் மண்ணில் அனைத்து உயிரினங்களும் வாழும் எனவும், திராவிட கட்சிகள் மக்களை மடையர்களாக ஆக்கி, 60 ஆண்டுகாலமாக இந்த மண்ணை சுடுகாடாக ஆக்கி உள்ளனர். நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலை கடத்துவோம் என மேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் ஆவேச பேசினார்.

மண்ணை சுடுகாடாக ஆக்கிய திராவிட கட்சிகள்
மேலூரில் நாம் தமிழர் கட்சியின் மேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டைகுமார் அறிமுக கூட்டம் மேலூர் பென்னிக்குயிக் பேருந்து நிலையம் அருகே, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தன்னை அறிமுகப்படுத்தி பேசிய வேட்பாளர் கோட்டைகுமார், அதிமுக மற்றும் திமுக என்பது வேறு வேறு கட்சிகள் அல்ல என்றும் இரண்டும் ஒரே கொள்கை உடைய கட்சி தான், திக விலிருந்து வந்த திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட திராவிட கட்சிகள் மக்களை மடையர்களாக ஆக்கி, 60 ஆண்டுகாலமாக இந்த மண்ணை சுடுகாடாக ஆக்கி உள்ளனர் என கடுமையாக விமர்சனம் செய்தார்.

யாரும் அரசியல் செய்ய முடியாது...
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி மேதகு பிரபாகரனின் கொள்கைகளையும் தமிழ் தேசியத்தையும் கடைபிடித்து களத்தில் நின்று போராடி வருவதாகவும், அடுத்து வரக்கூடிய அரசியலில் தமிழ் தேசியத்தை தவிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது எனவும் பேசியவர், தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் தேசிய அரசியலை மக்களிடையே கடத்தி விட்டு செல்லுவோம் எனவும் ஆவேசமாக பேசினார்.

ஆளும்கட்சி எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை
தொடர்ந்து பேசிய அவர், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சத்யாதேவி, மேலூர் பகுதி என்பது முல்லைப் பெரியாறு ஒருபோக பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட பகுதி எனவும் இங்கு வாழக்கூடிய கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க இதுவரை ஆண்ட மற்றும் ஆளுகின்ற கட்சிகள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை எனவும் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் சர்க்கரை கூட்டுறவு ஆலை நிச்சயம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விவசாயி வாழ்ந்தால்தான்...
மேலும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன், வாக்கு என்பது விற்பனைக்கு அல்ல என்றும் கிராமத்தில் வாக்கு தவறியதால் மாண்டு விட்டார்கள் என்று சொல்வார்கள் என்பதை சுட்டிக்காட்டி பேசியவர் வாக்கை விற்காமல் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் உறவுகள் வாக்களிக்க வேண்டும் எனவும் விவசாயி வாழ்ந்தால் மண்ணில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழும் எனவும் தெரிவித்தார்.

Related Link
மஞ்சள் நிறத்தில் மாறிய குடிநீர்

மஞ்சள் நிறத்தில் மாறிய குடிநீர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved