news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏற்கனவே நோயாள அவதிப்படுறோம், அதுல பாம்பு, தேள் வேற
tv

Also Watch

ஏற்கனவே நோயாள அவதிப்படுறோம், அதுல பாம்பு, தேள் வேற

திருவள்ளூர்

56

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvl 5(2)

திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் செடி கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை
திருத்தணியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் திருத்தணி, கே.ஜி கண்டிகை, பொதட்டூர்பேட்டை, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக வந்து மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

உள்நோயாளிகளாக 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை
அதேபோல் உள்நோயாளிகளாக 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பராமரிப்பின்றி மருத்துவமனை புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடம் வளாகம் முழுவதும் குப்பைகளாகவும், புதர் மண்டி, செடி, கொடிகள் இருப்பதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது.

அச்சமடைந்துள்ள உள்நோயளிகள்
இதனால் உள்நோயாளிகள் மருத்துவமனையில் இருக்க அச்சமடைகின்றனர். மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் அறைகள் மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு நோயாளிகள் தங்கும் அறைகள் மற்றும் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுகாதார சீர்கேடு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை
எனவே நோயாளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் உள்ள செடி கொடிகளை அகற்றி குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
டேய் இது கட்டுவிரியன் டா ... ஓடுங்க.... தலைதெறிக்க ஓடிய பெட்டிக்கடைக்காரர்

டேய் இது கட்டுவிரியன் டா ... ஓடுங்க.... தலைதெறிக்க ஓடிய பெட்டிக்கடைக்காரர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved