இந்தியா

’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஷரியத் சட்டம் அமலாகிவிடும்’

’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  ஷரியத் சட்டம் அமலாகிவிடும்’

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்திவிடும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அம்ரோஹாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு பொய்யான தேர்தல் அறிக்கையுடன் மீண்டும் ஒரு முறை மக்களிடம் வந்திருப்பதாக விமர்சித்தார். நமது நாடு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தால் இயங்க வேண்டுமா அல்லது இஸ்லாமிய ஷரியத் சட்டத்தால் இயங்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
 

00 Comments

Leave a comment