இந்தியா

இலங்கை, மொரிஷியசில் UPI பரிவர்த்தனை இன்று அறிமுகம்

இலங்கை, மொரிஷியசில் UPI பரிவர்த்தனை இன்று அறிமுகம்

இந்தியாவை தொடர்ந்து இலங்கை, மொரிஷியசிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவைகள் இன்று அறிமுகம் ஆகிறது.இந்தியாவின் யு.பி.ஐ. சேவைகள் உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வரும் நிலையில், யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் தற்போது இலங்கையும், மொரிஷியசும் இணைந்துள்ளன. யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொரிஷியசில் ரூபே கார்டு சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

00 Comments

Leave a comment