இந்தியா

நோ பால் கொடுக்காத கோபத்தில் கொந்தளித்த விராட் கோலி

நோ பால் கொடுக்காத கோபத்தில் கொந்தளித்த விராட் கோலி

நோ பால் கொடுக்காத கோபத்தில் விராட் கோலி குப்பை தொட்டியை அடித்து நொறுக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல்டாஸ் பந்தை கோலி கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து ஆட, அது எதிர்பாராத விதமாக ராணாவிடமே கேட்ச் ஆகிவிட்டது.பந்து இடுப்பு உயரத்திற்கு மேலே சென்றதால் கோலி நோ-பால் கேட்க, தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்த நடுவர்கள் நோ-பால் கொடுக்க மறுத்துவிட்டனர்.

00 Comments

Leave a comment