செய்தியாளர்களுக்கு மிரட்டல் - உதயநிதி கண்டனம்
மெத்தபெட்டமைன் கடத்தல் தொடர்பாக செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை நாகை தவெக நகர செயலாளர் மிரட்டியதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கட்சியா? இல்லை போதைப்பொருள் கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க. போதைப்பொருள் Networkன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போவதாக குற்றம் சாட்டி உள்ளார்
மிரட்டல்...
இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க. நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொ* மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க.வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் பத்திரிகையாளர்களுக்கு கொ* மிரட்டல் விடுவதும் ஏன்?
சுதந்திரமாக சுற்றி...
கட்சியா இல்லை Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் நெட்ஒர்க்-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglordsம், Cartel Mafiaவும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
ரீல்ஸ் எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் ரியாலிட்டிக்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.

