மு.க.ஸ்டாலின் கண்டனம்
மு.க.ஸ்டாலின் கண்டனம்

"போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு" என மு.க.ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் விஜய் நடித்த படங்களைப் பார்த்து, அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on: 

உலகத்துக்கே மெத்தபெட்டமைன் போதைப்பொருளை தயாரித்து விற்கும் மையமாக தமிழ்நாட்டை மாற்ற முயன்ற முன்னாள் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
முதலமைச்சர் விஜய் நடித்த படங்களைப் பார்த்து, இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

காவல்துறையின் அலட்சியத்தால்...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
அலட்சியத்தால் தொடரும் கொ*கள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.
சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொ* செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நடந்துள்ள மற்றுமொரு சம்பவம் காட்டியுள்ளது.
கொ* வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொ* செய்யப்பட்டுள்ளார்.

முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொ* இது.

பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொ* செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள்.

போதைப் பொருள் கடத்தலும்
நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது.
வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.

முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா?

கண்டும் காணாமலும்
மாநிலக் காவல்துறையினரால் இவர்களைப் பிடிக்க முடியவில்லையா? அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?

Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் controlல் வைக்க வேண்டும்.

அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?


உரிய கவனம் செலுத்துவதில்லை
துறைக்குப் பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததைப் போல, காவல்துறையையும் outsource செய்துவிட்டாரா?

காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன.

CM sir, your negligence is costing lives. Drugsஐ விடு, Sportsஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Restஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

newstamil.tv