தமிழ்நாடு

கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல்

கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே மோதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், ஊர்வலம் வந்த அம்மனின் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீதா ராம் தாஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு பிரிவை சேர்ந்த சிலர் அம்மன் சிலையின் தலைப் பகுதியை உடைத்ததால், பதற்றம் ஏற்பட்டது. மோதல் தீவிரமான நிலையில் போலீசார், சாமியின் சிலையை சேதப்படுத்தியதாக இருவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
 

00 Comments

Leave a comment