இந்தியா

தேர்தல் பிரசாரத்தை காஷ்மீரில் துவங்கும் பிரதமர் மோடி

தேர்தல் பிரசாரத்தை காஷ்மீரில் துவங்கும் பிரதமர் மோடி

 

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி காஷ்மீரில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையால் அங்கு பாஜகவின் பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் வருகையை முன்னிட்டு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

00 Comments

Leave a comment