news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீமுஷ்ணத்தில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் விநியோகம்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீமுஷ்ணத்தில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் விநியோகம்

ஸ்ரீமுஷ்ணம், கடலூரில்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL

சாக்கடை நீர் கலந்த குடிநீர் விநியோகம் : 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் நான்காவது வார்டு பகுதி கீழ வன்னியர் தெரு இருந்து வருகிறது இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீரில் சாக்கடை மற்றும் கழிவு நீர் கலந்து வருவதாக குடியிருப்பு மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

குடிநீரை குடிப்பதற்கும் மற்றும் குளிப்பதற்கு, சமைப்பதற்கு கூட பயன்படுத்த முடியவில்லை எனவும் வேதனையோடு தெரிவித்த அவர்கள் சில தினங்களுக்கு முன்பு சுத்தமான தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பேசிய இரண்டு பேரின் குடிநீர் இணைப்பை ஸ்ரீமுஷ்ணம் பேரூராடசி, நிர்வாகத்தினர் தற்போது இரண்டடி பள்ளம் தோண்டி துண்டித்து விட்டு சென்றுள்ளனர். இதனால் குடியிருப்பு மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

குடிநீர் கிடைக்காமலும் வேதனையுற்று வருகின்றனர். தங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்காமல் குடிநீர் இணைப்பு துண்டித்துள்ளதையும் கண்டித்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் மற்றும் சமையல் செய்யும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு மக்களின் குடிநீர் இணைப்பைத் துண்டித்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ள பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கண்டித்தும் வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகத்தில் இந்த அராஜக போக்கிற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து.

தங்களுக்கு உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும், துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Link
விவசாயிகள் சங்கத்தினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

விவசாயிகள் சங்கத்தினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved