news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தனிப்பட்ட ஒரு குடும்பத்தினரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா
tv

Also Watch

tv

Read this

தனிப்பட்ட ஒரு குடும்பத்தினரை கண்டித்து கிராம மக்கள் தர்ணா

பொன்னேரி, திருவள்ளூர்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவள்ளூர் மீனவர்

கிராம மக்கள் தர்ணா :

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட்ஹவுஸ் மீனவ கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தனிப்பட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கிராம மக்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து அமைதியை சீர்குலைத்து வருவதாக கூறி.

மீனவ கிராம மக்கள் ஊரை காலி செய்வதாக கூறி வாகனங்களில் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டு சென்றனர். தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாகவும் தொடர்ந்து கிராமத்தில் தனிப்பட்ட குடும்பத்தினர் பிரச்சனை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

10க்கும் மேற்பட்ட வாகனங்களில் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டுச் சென்ற மீனவ மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய போது, வாகனங்களில் இருந்து இறங்கி பெண்கள் அனைவரும்
மீண்டும் நடந்தே பொன்னேரி நோக்கி சென்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே தாட்கோ லோன் தொடர்பாக ஊருக்குள் பிரச்சனை இருந்து வருவதாகவும், தனிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து காவல் நிலையத்தில்
புகார் அளித்து ஊருக்குள் அமைதியை சீர்குலைத்து வருவதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசி வருவதாகவும் தரக்குறைவாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட குடும்பத்தினர் புகார் அளித்தால் மட்டும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஊர் மக்களை தொடர்ந்து அவதிக்கு ஆளாக்கி வருவதாக புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து காவல் நிலையம் நீதிமன்றம் என அலைக்கழித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தனிநபர் மீனவ கிராம பெண்களை அவதூறாக பேசிய தொடர்பாகவும் அளித்துள்ள புகார் குறித்து காவல்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உறுதியளித்ததை தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. ராஜா மீனவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Related Link
மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுகவில் அடுத்த விக்கெட், விலகினார் MGR விசுவாசி செம்மலை

3
9 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved