Also Watch
Read this
By: Web Team

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகளும், சேதமும் அதிகமாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தகவலின்படி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக முதலில் மெரோன் நகரின் மேற்கு பகுதியிலும், காரகாஸ் நகரில் இருந்து 168 கி.மீ. தொலைவிலும் ஏற்பட்டுள்ளது.

2வது நிலநடுக்கம் மெரோன் நகரில் இருந்து 16கி.மீ. தொலைவில் ஏற்பட்டுள்ளது. சில விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களால் தலைநகர் கராகாஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் குளுங்கி சேதமடைந்தன. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை தந்தன.
இதையும் படியுங்கள்: கவுன்சிலர்களால் கோபத்தில் எழுந்த மேயர் பிரியா!
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளில் சேதம் ஏற்பட்டதாகவும் இதனால் வான்வழிப் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் அவசரநிலையை அறிவித்த வெனிசுலா அரசு, பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.