news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக அடித்தால் நாங்கள் பேசக் கூடாதா? - கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா
tv

Also Watch

tv

Read this

திமுக அடித்தால் நாங்கள் பேசக் கூடாதா? - கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா

கொளத்தூரை சொல்ல கூடாதா..?

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
adhav arjuna

நீங்கள் அடித்து கொண்டே இருப்பீர்கள், நாங்கள் வாங்கி கொண்டே இருக்க வேண்டுமா என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார். 

வி.பி.சிங் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சமூகநீதி பேசும் திமுக சமூகநீதி கணக்கெடுப்பை இதுவரை எடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் சமூகநீதிக்காக திமுக அரசு எதனையும் செய்யவில்லை. சட்டபேரவையில் ஒருமையில் கேளி, கிண்டல், நையாண்டியுடன் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். சட்டமன்றத்தில் நடப்பதை முதல்வர் பொறுமையாக கவனித்து நோட்ஸ் எடுத்து கொண்டு இருக்கிறார்.


சோஃபா மாடல் அரசு, குதிரை பேரம் என எங்களை பற்றி தவறாக சித்தரிக்கும்போது அதற்கான பதிலைதான் நாங்கள் அளித்து வந்தோம். முதலமைச்சர் பேசமாட்டாரா, அமைதியக இருப்பாரா, அவர் ஊமையா, இடியே விழுந்தாலும் முதலமைச்சர் பேசமாட்டாரா என்று திமுக உறுப்பினர்கள் கிண்டலடித்தனர்.

சட்டமன்ற மரபுபடி தான் முதலமைச்சர் இருந்து வருகிறார். ஒவ்வொருநாளும் எழுந்து அவர் எல்லாரும் பதிலளிக்கும் மரபு இல்லை. சட்டமன்றம் லைவில் ஒளிபரப்பாவதை வைத்து கொண்டு பொய்யான பிம்பத்தை அவர்கள் பரப்புகின்றனர்.

இதையும் படியுங்கள்: திருச்செந்தூரில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை உயர்வா?

சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் பேசுவதை லைவில் ஒளிபரப்பு செய்ய எந்த முதல்வருக்கும் இதுவரை தைரியம் இல்லை. ஆனால், எங்கள் அரசுக்கு அந்த தைரியம் இருக்கு. கொளத்தூர் என்பது தமிழ்நாட்டில் இல்லையா, கொளத்தூரை சொல்ல கூடாதா..?

அவர்கள் அவ்வளவு அடித்தாலும் திரும்ப பேசாக் கூடாதா? திமுக ஆட்சியின் போது துறை ரீதியாக எந்த ஊழலும், பணமும் வாங்கவில்லை என்று சொல்ல முடியுமா? துறை ரீதியாக இத்தனை சதவீதம் என்று சொல்லி ஊழலில் திளைத்தனர். பள்ளி கல்வித்துறையில் கூட பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் தைரியமாக ஊழல் செய்ய மாட்டோம் என்று சொல்கிறார். அதில் நேர்மை உள்ளது. முதலமைச்சர் பேசிய பிறகு எதிர்கட்சி தலைவர் பேச சட்டமன்ற சபாநாயகர் கொடுத்தார். ஆனால், அவர்கள் அதை கூட ஏற்காமல் பிரச்சனை செய்தனர். பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னதால் அதை ஏற்று கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளார் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

தவெகவிடம் இருக்கும் விசிகவின் கூட்டணியை உடைக்க திமுக முயற்சி செய்கிறது. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் அறிவாலயத்தில் நடத்தும் வேலையில் திமுக ஈடுபட்டு வருகிறது. திமுகவின் பண்ணையார் ஆதிக்கத்தைதான் நாங்கள் உடைக்க நினைக்கிறோம். நாங்கள் அரசியல் மரபை மீறவில்லை. அவர்கள் கூறிய அனைத்திற்கும் முதலமைச்சர் தக்க பதிலைதான் அளித்தார். 

Related Link
கவுன்சிலர்களால் கோபத்தில் எழுந்த மேயர் பிரியா!

கவுன்சிலர்களால் கோபத்தில் எழுந்த மேயர் பிரியா!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

6
5 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau