Also Watch
Read this
By: Manigandan Raja

கோயில் தீமிதி திருவிழா கோலாகலம் :
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் நடைபெறும் வழக்கம், அதேபோல் இந்த வருடமும் கடந்த 21- ஆம் தேதி கம்பம் நடப்பட்டு பூச்சாட்டப்பட்டு திருவிழா தொடங்கியது.
22-ஆம் தேதி முதல் 26- ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மன் யானை, காமதேனு, அன்னம், சர்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 27 ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
(செவ்வாய்க்கிழமை) மாலை தீ மிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் தீ மிதித்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பூவாரி (நெருப்பு) போட்டுக் கொண்டும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
நாளை காலை பக்தர்கள் அழகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வருதலும் , மாலை பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. 30-ஆம் தேதி காலை கம்பம் காவேரி ஆற்றுக்கு செல்லுதலும், 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.