news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளதாக ஈரான் கூறியது
tv

Also Watch

tv

Read this

வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளதாக ஈரான் கூறியது

டிரம்ப்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் விரும்புகிறது :

ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என ஈரான் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்ரூத் வலைதள பதிவில், ஈரான் வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளதாக தங்களிடம் தெரிவித்ததாகவும், அவர்களது தலைமையை தேடும் சூழலில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க விரும்புவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணை திறக்கும் விஷயத்தை அவர்களால் செய்ய முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் ஈரான் அமைச்சர் காட்டம் :

எந்த சுதந்திர நாட்டிற்கும் நிபந்தனை விதிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை என ஈரானின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ரெசா தலாயி நிக் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், சுதந்திர நாடுகள் என்ன செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கும் நிலையில் இனி அமெரிக்கா இல்லை எனவும்.

தனது சட்டவிரோத, பகுத்தறிவற்ற கோரிக்கைகளை அமெரிக்கா கைவிட வேண்டும் எனவும் கூறினார். மேலும், ஈரான் தனது தற்காப்புக்கான ராணுவத் திறன்களை சுதந்திர நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

OPEC, OPEC+ அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல் :

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிலிருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளவில் பல்வேறு நாடுகளில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு, சில நாடுகளில் விலையும் உயர்த்தப்பட்டது.

எண்ணெய் விலையை உயர்த்துவதன் மூலம் மற்ற நாடுகளை பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு சுரண்டுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்த சூழலில்தான், மே 1-ம் தேதியில் இருந்து OPEC மற்றும் OPEC+ அமைப்பிலிருந்து விலகுவதாக யுஏஇ அறிவித்துள்ளது.

ஹஃபீஸ் சையதின் நெருங்கிய நண்பர் ஷேக் யூசுப் அப்ரிடி :

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் - இ - தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சையதின் நெருங்கிய நண்பர் ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். முக்கிய தலைவரான இவர், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, குழுக்களை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை செய்தவர்.

இவரை, பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா பகுதியில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இவரது கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நலமாக உள்ளார் :

ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்த வதந்திகளை நிராகரித்துள்ள இந்தியாவிற்கான அவரது துணை பிரதிநிதி டாக்டர் முகமது ஹொசைன் ஜியாயீனியா, மொஜ்தபா கமேனி மிகவும் ஆரோக்கியமாக நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் அவர் காயமடைந்து கோமா நிலையில் உள்ளதாக வெளியாத தகவல்கள் அனைத்து வதந்தி, உண்மையற்றவை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே பொது வெளியில் வருவதை தவிர்ப்பதாகவும், அதேசமயம் அதிகாரிகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரிட்டிஷ் இல்லையென்றால் பிரஞ்சு பேசி கொண்டிருப்பீர்கள்

0
11 mins agoshare
Trumph 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved