உலகம்

ஜெருசலேமில் ஹமாஸ் போராளிகள் தாக்குதல் தாக்குதலில் 3 பேர் பலி - 8 பேர் காயம்

ஜெருசலேம் நுழைவாயிலில் 2 பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாழக்கிழமை காலையில் இரண்டு ஹமாஸ் போராளிகள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

இதனைப் பார்த்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர்.

இந்த கோர தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெருசலேமில் ஹமாஸ் போராளிகள் தாக்குதல்   தாக்குதலில் 3 பேர் பலி - 8 பேர் காயம்

00 Comments

Leave a comment