news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு
tv

Also Watch

tv

Read this

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு

புக் செய்வதில் புதிய விதிமுறை

27

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வணிக சிலிண்டர்களை போலவே, வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 25 நாட்களுக்கு பிறகே 2ஆவது கேஸ் சிலிண்டருக்கு புக் செய்ய முடியும் என்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

21ல் இருந்து 25 நாட்களாக அதிகரிப்பு
ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி, 21 நாள்களில் இருந்து, 25 நாள்களாக உயர்த்தப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு கூறி உள்ளது. மேற்காசிய போர் நிலவரம் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசர கால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மத்திய அமைச்சகம் ஆலோசனை
இதுகுறித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹர்தீப் சிங் புரி தலைமையில், டில்லியில் நடைபெற்ற உயர்நிலைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

* இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

* இதன்படி, சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை செய்ய முடியும்.

போர் எதிரொலி...
போர் காரணமாக, மேற்காசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணை கடல் வழித் தடத்தை மூடி விட்டதால், வேறு வழித் தடங்கள் வழியில் கச்சா எண்ணெய்யை பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.


Related Link
தங்கத்தின் விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை அதிகரிப்பு

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
11 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved