news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home bigstoriesnews கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!
tv

Also Watch

tv

Read this

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

எ.வ.வேலு

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எ.வ.வேலு

தொட்டக்குறிச்சி - கரூர் சாலை, மண்மங்களம் - நன்னியூர் சாலை, நேரூர் - தளவபாளையம் சாலை முதல் புதூர் - நன்னியூர் சாலை வரை, கரூர் - இசநத்தம், கூம்பூர், விரியம்பட்டி இடையிலான சாலைகளை தரம் உயர்த்துவதற்காக ரூ.4.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், 2022 மார்ச்வரை எந்தப் பணிகளும் செய்யப்படாத நிலையில் ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கு ரூ.3.20 கோடி பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் சி & எம் கோட்டப் பொறியாளர் சத்யபாமா, ஏடிஇ ஆர்.கண்ணன், இளநிலைப் பொறியாளர் பூபாலன் சிங் மற்றும் கோட்டக் கணக்காளர் கே.பெரியசாமி ஆகிய 4 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சாலை அமைக்கப்படாமலேயே ரூ.3.20 கோடி செலுத்தப்பட்டுள்ளது என கண்காணிப்புப் பொறியாளர், தலைமைப் பொறியாளருக்குச் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன இது ஆதாரங்களை அழிப்பதற்கான கூட்டுச்சதி முயற்சி என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அவரது அலுவலகம் உள்பட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் இறங்கினர்.

அதேபோல, கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும், அரசு பணி ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கர் ஆனந்த் வீடு உட்பட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

பழனியப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த் வீட்டிற்கு இரண்டு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்தி என்பவர் வீடு மற்றும் பள்ளப்பட்டி ஆசாத் நகர் பகுதியில் சென்னை பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றும் ரபிக் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


சுமார் 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழு கரூரில் முகாமிட்டு சோதனையை கையில் எடுத்துள்ளனர் இதனிடையே, இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கண்ணன், பூபாலன், பெரியசாமி, சத்தியபாமா உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 11 பேர் மீது கூட்டுச்சதி, ஊழல் தடுப்பு உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து பேசிய எ.வ.வேலு தரப்பு வழக்கறிஞர், எத்தனை பிரிவுகளின்கீழ் வேண்டுமானாலும் வழக்குப்பதிவு செய்யலாம் அதற்கு ஆதாரம் தேவையில்லை, ஆனால் வழக்கை நீதிமன்றத்தில் நிரூபிக்க நிச்சயம் ஆதாரம் தேவை எனக்கூறியதோடு இந்த வழக்குகள் எல்லாம் நீர்த்துப்போகும் என தெரிவித்தார்.. மேலும், எத்தனை வழக்குகளை போட்டாலும் அதனை சந்திக்க தெம்பும், திராணியும் உள்ளது, எனவே வழக்குகளை போடுங்கள் என சவால்விட்டார்..

வாரணாசி கன்னியாகுமரி சாலை கி.மீ.281/296-ல் பயணத் தரத்தை மேம்படுத்துதல் (தொட்டக்குறிச்சி மற்றும் கரூர் அருகே உள்ள NH7-ன் கைவிடப்பட்ட பகுதி)

2 கி.மீ.-ல் பயணத் தரத்தை மேம்படுத்துதல் மன்மங்கலம் நன்னியூர் சாலை

கரூர் - தலவபாளையம் சாலையிலிருந்து புதுர் நன்னியூர் சாலை வரையிலான கி.மீ. 12 பயணத் தரத்தை மேம்படுத்துதல்.

கரூர் - ஈசனத்தம் கூம்பூர் விரியம்பட்டி சாலையின் கி.மீ. 6 பகுதிகளில் இடைநிலைச் சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்துதல்

இந்த 4 சாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.4.19 கோடி ஆகும். மேற்கூறிய சாலைகளில் மார்ச் 2022 வரை எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இருப்பினும், மேற்கண்ட சாலைகளுக்கான கட்டணத்தில் 77% அதாவது ரூ.3.23 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர் 5/4/2022 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, 8/4/2022 அன்று, கரூர் சி&எம் கோட்டப் பொறியாளர் சத்யபாமா, ஏடிஇ ஆர்.கண்ணன், இளநிலைப் பொறியாளர் பூபாலன் சிங் மற்றும் கோட்டக் கணக்காளர் கே.பெரியசாமி ஆகிய 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

சாலை அமைக்கப்படாமலேயே மேற்கண்ட கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்று கண்காணிப்புப் பொறியாளர், தலைமைப் பொறியாளருக்குச் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இது நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம், ஒப்பந்ததாரர் நியாயமற்ற முறையில் ஆதாயம் அடைவதற்கு வழிவகுத்த மோசடி மற்றும் ஊழல் எனும் ஒரு குற்றச் செயல் நடைபெற்றுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றத்திற்காகக் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, 8/4/2022 அன்று இரவு ஒப்பந்ததாரருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக ஒரு பட்டாலியன் போலீசார் வரவழைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

கரூர் காவல்துறை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எந்தவித இடையூறும் இன்றி சாலைகள் அமைப்பதற்காக குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இது, அரசு கருவூலப் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரான சங்கரானந்த் இன்ஃப்ரா செய்த குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகும்.

மாநில நெடுஞ்சாலைச் செயலாளர் அல்லது தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்புப் பொறியாளர், அந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் புகார் அளித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, 8/4/2022 அன்று இரவு சாலை அமைத்து, ஆதாரங்களை அழிப்பதற்காக அவர்கள் கூட்டுச் சதி செய்ததாகத் தெரிகிறது.

கடந்த திமுக ஆட்சியில் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் தற்போது இருந்து வருகிறார்.

2006-2011 ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவா வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Link
மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்பலி.!

மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்பலி.!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
1 hr 7 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau