Also Watch
Read this
By: Web Team

பக்கத்து ஊரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றவர் மீது சரமாரி தாக்குதல்..மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்... ஊர் விட்டு ஊர் வந்த கும்பல் செய்த கொடூர சம்பவம்... 3பேரை கைது செய்த காவல்துறை.... தூங்கி கொண்டிருந்த போது தவறி விழுந்தாரா இல்லை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை.. நடந்தது என்ன?
அன்னைக்கு நைட் சுமார் 12 .30 மணி அளவுல துரை வீட்டு வாசல்ல புல் மதுபோதையில நின்னுட்டு இருந்த மூணு பேர் வெளியவாடா, நீ வரலன்னா, நாங்க உள்ள வருவோமுன்னு கத்திட்டு இருந்தாங்க... இதக்கேட்டு பயந்து போன துரை வீட்டுக்குள்ள இருந்து வெளிய வராம இருந்துருக்காரு.. ஆனாலும் விடாது ஆபாச வார்த்தைகளால திட்டி தீர்த்த அந்த மூணு பேரும் கொஞ்ச நேரத்துல தட தடன்னு பக்கத்துவீட்டுல ஏறிகுதிச்சு அந்த வீட்டு வழியா துரை வீட்டுக்குள்ள நுழைஞ்ச அந்த கும்பல் துரை தரத ரனு இழுத்துட்டு போய் அவங்க வீட்டு மாடியில இருந்து கண்ணிமைக்கும் நேரத்துல கீழ தள்ளிவிட்டுட்டு அங்கிருந்து தப்பிச்சு போனதா சொல்லப்படுது.. பிறகு ரத்த வெள்ளத்துல உயிருக்கு போராடிட்டு இருந்த துரைய அக்கம்பக்கத்துல இருந்தவங்க தூக்கிட்டு போய் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்த நிலையில அவரு சிகிச்சை பெற்று வந்த நிலையில பரிதாபமா உயிரிழந்தாரு. உண்மையாகவே துரை மாடியிலிருந்து தள்ளிவிட்டதுல தான் இறந்தாரா? இல்ல மாடியில தூங்கிட்டு இருந்தபோ தவறி விழுந்து உயிரிழந்தாரா? யார் அந்த மூணு பேர்? உயிரிழந்த துரைக்கும் இந்த மூணு பேருக்கும் என்ன சம்பந்தன்னு போலீஸ்காரங்க பல்வேறு கோணங்கள் விசாரணை செய்தததுல வெளியாச்சு அந்த இந்த பயங்கர சம்பவத்துக்கான பின்னணி..
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த குயிலம் கிராமத்தைச் சேர்ந்தவரு 24 வயசான அஜித் குமார். இவரோட தம்பி 22 வயசான துரை. அஜித் குமார் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். தம்பி துரை கார் ஓட்டுனரா வேலை செஞ்சுட்டு வந்துருக்காரு. இவங்க ரெண்டு பேருக்குமே திருமணம் ஆகல. இந்த நிலையில மதுகுடிக்க அண்ணன் அஜித் குமார் பக்கத்துல இருக்குற பெருங்குளத்தூருல உள்ள டாஸ்மாக் கடைக்கு போயிருக்காரு. அஜித் ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வராததால தம்பி துரை அவரை தேடி பெருங்குளத்தூர் போனதா சொல்லப்படுது.
அங்க போனதும் டாஸ்மாக்குல இருந்த மதுபோதையில அஜித் குமார கைதாங்கலா பிடிச்சு அழைச்சிட்டு வந்த போது அங்க மது குடிச்சுட்டு நின்னுட்டு இருந்த மது அருந்து கொண்டிருந்த சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய மூணு பேரும் துரைக்கிட்ட நீ எந்த ஊருன்னு கேட்டு வம்பு இழுத்ததா கூறப்படுது. அதுக்கு துரையும் பதிலுக்கு பதில் பேசி சண்டையிட்டுருகாரு.. இதனால ஆத்திரமான மூணு பேரும் சேர்ந்து துரைய அடிச்சுருக்காங்க.. அப்போ துரை உங்க ஊருக்கு வந்ததால தான என்னை அடிச்சீங்க, நீங்க எங்க ஊருக்கு வந்து பாருங்க உங்கள என்ன பண்றேன்னுனு சொல்லி அங்கிருந்து அஜித்த கூட்டிட்டு பைக்குல தப்பிச்சு வந்ததா கூறப்படுது
பிறகு துரையை தேடி இரவு சுமார் 9 மணி அளவுல குயிலம் கிராமத்துக்கு வந்த அந்த மூணு பேரும் துரையை வீட்டுக்கு போய் வெளிய வாடான்னு கூப்பிட்டு தகாத வார்த்தையால ஆபாசமா திட்டி இருக்காங்க. பிறகு அங்க இருந்தவங்க அவங்கள சமாதானப்படுத்தி அனுப்பி வச்சதாகவும் கூறப்படுது.. அதுக்கு பிறகு நைட் சுமார் 12.30 மணி அளவுல திரும்பி வந்த அந்த மூணு பேரும் துரையோட பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதிச்ச முணு பேரும் துரையோட வீட்டுக்குள்ள நுழைஞ்சு அவர இழுத்துட்டு போய் மாடியில இருந்து தள்ளிவிட்டதா சொல்லப்படுது. யாரோ கீழ விழுற மாதிரி சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்துல இருந்தவங்க பலத்த காயத்தோட ரத்த வெள்ளத்துல கிடந்த துரையை தூக்கிட்டு மருத்துவமனையில் சேர்த்தாங்க. அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமா உயிரிழந்தாரு.. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் சிவா, ராஜேஷ், அசோக் ஆகிய மூணு பேரை கைது செய்த நிலையில துரை மாடியில தூங்கும் போது தான தூக்கதுல தவறி விழுந்தார? இல்ல திட்டமிட்ட கொலையான்னு விசாரணை செஞ்சுட்டு வராங்க..